Monday, September 22, 2014

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று 2000ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 2 படித்த பட்டதாரி ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய கோரி சுசிலா உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
மனுதாரர்கள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிகளை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரவில்லை. தேசிய கல்வி கவுன்சிலின் விதிகளை பின்பற்றியே தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் முறையை பின்பற்றியுள்ளது.
ஆசிரியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை கொள்கை முடிவாக எடுத்து செயல்படுத்தி வருகிறது. அரசு எடுக்கும் கொள்கை முடிவில் விதிமுறைகள் மீறி முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அதில் கோர்ட்டு தலையிட முடியும்.
ஆனால், இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிட முடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மாலைமலர்  சென்னை 22-09-2014 (திங்கட்கிழமை)

9 comments:

  1. Dear admin
    please guide me how to go doddabelur in krishnagiri dist

    ReplyDelete
    Replies
    1. sir pls check the spelling
      Doddaubbanur or doddabelur

      Delete
    2. doddabelur only

      Delete
    3. GOVT HIGH SCHOOL
      DODDABELUR KELAMANGALAM
      2KMs from Kelamangalam Taluk in Krishnagiri District
      Kelamangalam 2KM
      Hosur 15 KM
      Shoolagiri 21 KM
      Thally 23 KM

      Delete
    4. thanks you so much admin.......

      Delete
  2. From tanjore to doddabelur krishnagiri
    and
    vellore to doddabelur krishnagiri
    waiting for your reply sir

    ReplyDelete
  3. Paper1 welfare school list eppa viduvanga admin sir? Pls reply pannunga sir

    ReplyDelete
  4. Hope pls
    I hav 70.27 weitage in paper 1
    Sc. Male
    U,g

    ReplyDelete
  5. kanyakumari to arani bus route ? please guide me sir!

    ReplyDelete