Thursday, September 25, 2014

TET:தடை முற்றிலும் நீங்கியது.

ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக  வழங்கப்பட்ட தடையானை இன்று முற்றிலும் நீக்கப்பட்டது.இன்னும் சில மணித்துளிகளில் அதற்கான நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்படும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை தமிழரசன் உட்பட 73 பேர் உட்பட பலர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கின் போது வாதிகளிஓன் தரப்பில் தடை இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து  அமலில் இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்  அமர்வு நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பணி நியமனத்திற்கு எதிராக வழங்கிய தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆசிரியர் நியமனத்தில் 80 பணியிடங்களை வழக்குத் தொடர்ந்தவர்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு மீதமுள்ள பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கின் விசாரணையை oct 6 க்கு  ஒத்திவைத்துள்ளார்கள்.

தீர்ப்பின் நகல் பெறப்பட்டதும் பள்ளிக் கல்விதுறையிடமிருந்து பணி நியமன ஆணை குறித்த செய்தி முறையாக வெளியாகும்.

No comments:

Post a Comment